/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
இயற்கை உரங்களை மானிய விலையில் வழங்க கோரிக்கை
/
இயற்கை உரங்களை மானிய விலையில் வழங்க கோரிக்கை
ADDED : ஆக 11, 2025 12:34 AM
உத்திரமேரூர்:இயற்கை உரங்களை மானிய விலையில் அரசு வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இயற்கை வேளாண்மை விழிப்புணர்வு சங்கம், ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்ட கிளை சார்பில், நிர்வாகக் குழு கூட்டம் காரணை மேட்டுப்பாளையதில் நேற்று நடந்தது.
மாவட்ட தலைவர் ஏழுமலை தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் வெங்கடாச்சலம் முன்னிலை வகித்தார். அதில், இயற்கை விவசாயத்திற்கு தேவையான இயற்கை உரங்களை அரசு மானிய விலையில் வழங்க வேண்டும்.
இயற்கை விவசாயிகள் சாகுபடி செய்யும் விளை பொருட்களை அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு அரசு இயற்கை விவசாய பயிற்சிகளை முறையாக அளிக்க முன்வர வேண்டும்.
அரசு தரிசு நிலங்களில் தென்னை, பனை மற்றும் பழ மரங்களையும் அரசு நடவு செய்து பராமரிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் இயற்றப்பட்டன.