/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கழிவுநீர் கால்வாய் சீரமைக்க கோரிக்கை
/
கழிவுநீர் கால்வாய் சீரமைக்க கோரிக்கை
ADDED : பிப் 08, 2025 12:21 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி 45வது வார்டு, வேளிங்கபட்டரை பாரதியார் தெருவில், அப்பகுதியில் வீட்டு உபயோக கழிவுநீர் வெளியேறும் வகையில், சாலையோரம் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இக்கால்வாயை மாநகராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காததால், கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் வெளியேற வழியின்றி ஒரே இடத்தில் பாசிபடர்ந்து தேங்குவதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.
சாலையின் தரைமட்டத்தில் கால்வாய் உள்ள நிலையில், மழைபெய்தால், கழிவுநீருடன் மழைநீர் கலந்து, கழிவுநீர் முழுதும் வெளியேறும் சூழல் உள்ளது. மேலும், மாதகணக்கில் தேங்கும் கழிவுநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது.
எனவே, பாரதியார் தெருவில், துார்ந்து கிடக்கும் கழிவுநீர் கால்வாயை துார்வாரி சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தியுள்ளனர்.