/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வரத்து கால்வாய் ஓரம் கொட்டியுள்ள கட்டட கழிவுகள் அகற்ற கோரிக்கை
/
வரத்து கால்வாய் ஓரம் கொட்டியுள்ள கட்டட கழிவுகள் அகற்ற கோரிக்கை
வரத்து கால்வாய் ஓரம் கொட்டியுள்ள கட்டட கழிவுகள் அகற்ற கோரிக்கை
வரத்து கால்வாய் ஓரம் கொட்டியுள்ள கட்டட கழிவுகள் அகற்ற கோரிக்கை
ADDED : ஆக 11, 2025 11:49 PM

காஞ்சிபுரம், ஏரி நீர் வரத்து கால்வாய் ஓரம் கொட்டியுள்ள கட்டடக் கழிவுகளை அகற்ற வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
காஞ்சிபுரம் அடுத்த, கொட்டவாக்கம் கிராமத்தில் இருந்து, பள்ளம்பாக்கம் வழியாக, தண்டலத்திற்கு செல்லும் பிரதான சாலை உள்ளது.
இந்த சாலை குறுக்கே வளத்துார் ஏரிக்கு செல்லும் நீர் வரத்து கால்வாய் செல்கிறது. மழைக்காலங்களில், போந்தவாக்கம் ஏரி நிரம்பினால், உபரிநீர் வளத்துார் ஏரிக்கு செல்கிறது.
இந்த ஏரி நீர் வரத்து கால்வாய் ஓரத்தில், பள்ளம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த சிலர் கட்டடக் கழிவுகளை கொட்டி உள்ளனர். இந்த கட்டடக் கழிவு குவியலால், மழைக்காலத்தில் தண்ணீர் செல்லும் போது தடை ஏற்படும் நிலை உள்ளது.
எனவே, வளத்துார் ஏரி நீர் வரத்து கால்வாய் ஓரம் கொட்டியுள்ள கட்டடக் கழிவுகளை அகற்ற வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை எழுப்பி உள்ளனர்.