/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
புதர் மண்டிய ரேஷன் கடை சீரமைக்க கோரிக்கை
/
புதர் மண்டிய ரேஷன் கடை சீரமைக்க கோரிக்கை
ADDED : ஜன 02, 2025 08:41 PM
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், திருவாணைகோயில் ஊராட்சி, மாம்பாக்கம் கிராமத்தில் உள்ள, அங்கன்வாடி மையம் அருகே ரேஷன் கடை உள்ளது.
இந்த கடை வாயிலாக, அப்பகுதி குடியிருப்புவாசிகளுக்கு, மாதந்தோறும் அரிசி, பருப்பு, சர்க்கரை, சமையல் எண்ணெய் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ரேஷன் கடை முன், முறையாக பராமரிப்பு இல்லாததால், செடி, கொடிகள் முளைத்து புதர் மண்டி உள்ளது.
இதனால், அப்பகுதியில் பாம்பு, பூரான் உள்ளிட்ட விஷஜந்துக்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளன. இங்கு, உணவு பொருட்களை வாங்க வரும் பொதுமக்கள், அச்சத்துடனே வந்து செல்லும் நிலை உள்ளது. மேலும், ரேஷன் கடைக்கு உணவு பொருட்களை ஏற்றிவரும், வாகனங்களை கடை முன் நிறுத்தி, பொருட்களை இறக்கி வைக்க சிரமமாக உள்ளது. எனவே, ரேஷன் கடை முன் உள்ள, செடி, கொடிகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.