/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாய்ந்த மின் கம்பத்தை சீரமைக்க கோரிக்கை
/
சாய்ந்த மின் கம்பத்தை சீரமைக்க கோரிக்கை
ADDED : ஜூலை 17, 2025 01:09 AM

ஸ்ரீபெரும்புதுார்,:சிறுமாங்காடு செல்லும் சாலையோரம் சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பத்தை, சீரமைக்க கோரிக்கை எழுந்துஉள்ளது.
ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், சிறுமாங்காடு ஊராட்சியில் உள்ள வீடுகளுக்கு, சாலையோரம் மின் கம்பங்கள் வழியாக, மின் வழித்தடம் செல்கின்றன.
இவற்றில் சில மின்கம்பங்கள் சாய்ந்து, விழும் நிலையில் உள்ளது.
இதனால், சிறுமாங்காடு சாலையில் மின் விபத்து ஏற்படும் சூழல் அதிகரித்து உள்ளது.
இதனால், சிறுமாங்காடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின் தடை பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது.
மேலும், இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மின் கம்பி அறுந்து விழுந்து, விபத்தில் சிக்கும் அச்சத்தில் சென்று வருகின்றனர்.
எனவே, ஆபத்தான நிலையில் சாய்ந்துள்ள மின் கம்பத்தை, மின் வாரிய அதிகாரிகள் சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.