/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பல்லங்குழியான சாலையை சீரமைக்க கோரிக்கை
/
பல்லங்குழியான சாலையை சீரமைக்க கோரிக்கை
ADDED : டிச 14, 2024 01:30 AM

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சி, 7 வது வார்டுக்குட்பட்ட விக்னேஷ் நகர், சரளா நகர், பெரியார் நகர் உள்ளிட்ட பகுதிகள் 2 ஆயிரத்திற்கு அதிகமான வீடுகள் உள்ளன.
இப்பகுதிகளில், பாதாள சாக்கடை பணிக்கு பின் சாலைகள் சீரமைக்கப்படாதால், சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது. மழை பெய்யும் போது, சாலையில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால், இவ்வழியாக செல்லும் வாகனங்கள் பள்ளத்தில் விபத்தில் சிக்கி வருகின்றன.
இந்நிலையில், நேற்று முன்தினம் பெய்த மழையால், ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சியில் பல இடங்களில் சாலை போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் மாறி உள்ளது.
எனவே சேதமான சாலைகளை சீரமைக்க பேரூராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

