/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
குண்டும், குழியுமான சாலை சீரமைக்க கோரிக்கை
/
குண்டும், குழியுமான சாலை சீரமைக்க கோரிக்கை
ADDED : மே 10, 2025 01:13 AM

ஸ்ரீபெரும்புதுார்:வண்டலுார் -- வாலாஜாபாத் சாலையில், படப்பை அடுத்த, செரப்பனஞ்சேரியில் இருந்து பிரிந்து செல்லும் காஞ்சிவாக்கம் சாலை வழியே பகுதி மக்கள், படப்பை, ஒரகடம், தாம்பரம் ஆகிய பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
பள்ளி பேருந்துகள் உட்பட கார், பைக் உள்ளிட்ட வாகனங்கள் அதிகம் சென்று வரும் இந்த சாலையில், பல இடங்களில் சாலை குண்டும், குழியுமாக மாறியுள்ளது.
இதனால், இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகினறனர். இருசக்கர வாகன ஓட்டிகள், சாலை நடுவே உள்ள பள்ளங்களில் நிலைத்தடுமாறி விழுந்து காயமடைந்து வருகின்றனர்.
எனவே, சேதமான காஞ்சிவாக்கம் சாலையை சீரமைக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகளிடையே கோரிக்கை எழுந்துள்ளது.