/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கான்கிரீட் பெயர்ந்த குடிநீர் தொட்டியை சீரமைக்க கோரிக்கை
/
கான்கிரீட் பெயர்ந்த குடிநீர் தொட்டியை சீரமைக்க கோரிக்கை
கான்கிரீட் பெயர்ந்த குடிநீர் தொட்டியை சீரமைக்க கோரிக்கை
கான்கிரீட் பெயர்ந்த குடிநீர் தொட்டியை சீரமைக்க கோரிக்கை
ADDED : ஜூலை 21, 2025 01:48 AM

ஸ்ரீபெரும்புதுார்:குண்டுபெரும்பேடு ஊராட்சியில் முறையாக பராமரிப்பு இல்லாததால், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கான்கிரீட் பெயர்ந்து சேதமடைந்து உள்ளது.
ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், குண்டுபெரும்பேடு ஊராட்சியில் 1,000க்கும் அதிகமான வீடுகள் உள்ளன.
இங்குள்ள குடியிருப்புகளுக்கு, ஜெ.ஜெ. நகர் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து, குடிநீர் தினமும் வினியோகம் செய்யப்படுகிறது.
இந்த நிலையில், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை ஊராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காததால், குடிநீர் தொட்டியின் துாண்கள் சேதமடைந்து, கான்கிரீட் பெயர்ந்து வருகிறது.
மேலும், இரும்பு கம்பிகள் துருப்பிடித்து வருவதால், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி உறுதி தன்மை இழந்து, இடிந்து விழும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, சேதமடைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

