/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கிளை கால்வாயில் கோரைப்புல் துார்வாரி சீரமைக்க கோரிக்கை
/
கிளை கால்வாயில் கோரைப்புல் துார்வாரி சீரமைக்க கோரிக்கை
கிளை கால்வாயில் கோரைப்புல் துார்வாரி சீரமைக்க கோரிக்கை
கிளை கால்வாயில் கோரைப்புல் துார்வாரி சீரமைக்க கோரிக்கை
ADDED : ஜூலை 18, 2025 01:53 AM

காஞ்சிபுரம்:கோரைப்புல் வளர்ந்துள்ள மஞ்சள்நீர் கிளை கால்வாயை துார்வாரி சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
காஞ்சிபுரம் நகரில் பெய்யும் மழைநீர் வெளியேறும் வகையில், மஞ்சள்நீர் கால்வாய், கைலாசநாதர் கோவில் அருகில், புத்தேரி பகுதியில் துவங்கி, கிருஷ்ணன் தெரு, பல்லவர்மேடு, காமராஜர் வீதி, ரயில்வே சாலை, ஆனந்தாபேட்டை, திருக்காலிமேடு வழியாக, நத்தப்பேட்டை ஏரியில் இணைகிறது.
இதன் கிளை கால்வாய், மடம் தெரு அருகில் பிரிந்து மேட்டுத் தெரு, எம்.எம்.அவென்யூ, ரங்கசாமி குளம், நாகலுாத்துமேடு வழியாக சென்று வேகவதி ஆற்றுடன் இணையும் வகையில் வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது.
முறையான பராமரிப்பு இல்லாததால், இக்கால்வாயில் ஆங்காங்கே கோரைப்புல் வளர்ந்து உள்ளது.
இதனால், பலத்த மழை பெய்தால், கால்வாய் வாயிலாக செல்ல வேண்டிய மழைநீர், குடியிருப்புகளுக்குள் புகும் சூழல் உள்ளது.
எனவே, மஞ்சள்நீர் கிளை கால்வாயை துார்வாரி சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.