/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காட்டகரம் தரைப்பாலத்தை சீரமைக்க கோரிக்கை
/
காட்டகரம் தரைப்பாலத்தை சீரமைக்க கோரிக்கை
ADDED : செப் 08, 2025 12:28 AM

மேவளூர்குப்பம்:காட்டகரம் கிராமத்தில், தரைப்பாலத்தை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், மேவளூர்குப்பம் ஊராட்சியில், காட்டகரம் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் இருந்து, செட்டிபேடு செல்லும் சாலையில் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்வரத்து கால்வாயான கிருஷ்ணா கால்வாய் செல்கிறது.
இந்த கால்வாய் குறுக்கே உள்ள தரைப்பாலத்தை அப்பகுதி மக்கள் பயன்படுத்தி செல்கின்றனர். இந்நிலையில், இந்த தரைப்பாலம் மீதுள்ள சாலை சேதமாகி குண்டும், குழியுமாக உள்ளது. இதில் மழைநீர் தேங்கி நிற்பதால் தரைப்பாலம் பலவீணாகி வருகிறது.
எனவே, தரைப்பாலத்தையும், அதன் மீதுள்ள சாலையையும் சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.