ADDED : டிச 05, 2024 11:44 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்திரமேரூர், உத்திரமேரூர் ஒன்றியம், மல்லியங்கரணை கிராமத்தில்,பொதுப்பணித்துறை காட்டுப்பாட்டில் 100ஏக்கர் பரப்பளவில்ஏரி உள்ளது.
இந்த ஏரியின் வாயிலாக, 150 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
தற்போது, ஏரியின் கலங்கல் பராமரிப்பு இல்லாமலும்,மரங்கள் வளர்ந்து உள்ளன. பருவ மழை நேரங்களில் ஏரி நிரம்பும்போது, தடையின்றி கலங்கல் வழியே,உபரிநீர் வெளியேற முடியாத நிலைஉள்ளது.
மேலும், நீரை சேகரிக்க முடியாமல் வீணாக வெளியேறி,கோடைக்காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
எனவே துறை அதிகாரிகள் ஆய்வு செய்து சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.