/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சகதியான சாலையை சீரமைக்க கோரிக்கை
/
சகதியான சாலையை சீரமைக்க கோரிக்கை
ADDED : ஜன 27, 2025 11:44 PM

ஏனாத்துார், காஞ்சிபுரம் ஒன்றியம் கோனேரிக்குப்பம் ஊராட்சி, எச்.எஸ்., அவென்யூவில், 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. ஏனாத்துார் -- வையாவூர் சாலையில் இருந்து. எச்.எஸ்., அவென்யூ மற்றும் மாவட்ட தீயணைப்பு அலுவலகத்திற்கு செல்லும் சாலைகளில் ஒன்றான அன்னை தெரசா தெருவிற்கு சாலை வசதி ஏற்படுத்தவில்லை.
இதன் காரணமாக, மண் சாலையாக உள்ளது. மழை பெய்தால் போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. சமீபத்தில் பெய்த மழைக்கு, சகதி சாலையாக மாறியுள்ளது. இதனால், சாலையில் நடந்து செல்லும் சிறுவர்கள், முதியோர் வழுக்கி விழுந்து காயமடைகின்றனர்.
அதேபோல, இருசக்கர வாகன ஓட்டிகளும் நிலைதடுமாறி விழுகின்றனர். எனவே, மண் சாலையாக உள்ள அன்னை தெரசா தெருவிற்கு, சிமென்ட் சாலை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

