/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சி ரயில் நிலையம் அருகில் கழிப்பறை சீரமைக்க கோரிக்கை
/
காஞ்சி ரயில் நிலையம் அருகில் கழிப்பறை சீரமைக்க கோரிக்கை
காஞ்சி ரயில் நிலையம் அருகில் கழிப்பறை சீரமைக்க கோரிக்கை
காஞ்சி ரயில் நிலையம் அருகில் கழிப்பறை சீரமைக்க கோரிக்கை
ADDED : ஏப் 16, 2025 01:05 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் காமாட்சியம்மன் சன்னிதி தெருவில், பழைய ரயில்நிலையம் அருகில், கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் பொது கழிப்பறை கட்டடம் கட்டப்பட்டது. ரயில் நிலையம் சுற்றியுள்ள பகுதியினர் மட்டுமின்றி, ரயில் நிலையத்திற்கு வந்து செல்லும் பயணியரும் பொது கழிப்பறையை பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன் கழிப்பறையின் தண்ணீர் தேவைக்காக ஆழ்துளை குழாயில் பொருத்தப்பட்டுள்ள நீர்மூழ்கி மின்மோட்டார் பழுதானது. பழுதடைந்த மின்மோட்டாரை மாநகராட்சி நிர்வாகம் சீரமைக்கவில்லை.
இதனால், கழிப்பறை கட்டடம் பயன்பாடின்றி வீணாகி வருகிறது. எனவே, மின்மோட்டாரை பழுது நீக்குவதோடு கழிப்பறையை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், தொடர்ந்து பராமரிக்கவும் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தியுள்ளனர்.