/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஆரம்பாக்கம் கூட்டு சாலையில் சிக்னல் அமைக்க கோரிக்கை
/
ஆரம்பாக்கம் கூட்டு சாலையில் சிக்னல் அமைக்க கோரிக்கை
ஆரம்பாக்கம் கூட்டு சாலையில் சிக்னல் அமைக்க கோரிக்கை
ஆரம்பாக்கம் கூட்டு சாலையில் சிக்னல் அமைக்க கோரிக்கை
ADDED : பிப் 18, 2025 05:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
படப்பை : வண்டலுார் -- வாலாஜாபாத் நெடுஞ்சாலையை பயன்படுத்தி தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. இந்த சாலையில், படப்பை அருகே ஆரம்பாக்கம் கூட்டு சாலை உள்ளது.
இந்த பகுதியில் போக்குவரத்தை ஒழுங்குப் படுத்த தானியங்கி சிக்னல் இல்லை. போலீசாரும் பாதுகாப்பு பணியில் இருப்பதில்லை.
இதனால், வாகன ஓட்டி கள் தங்கள் இஷ்டம் போல்சாலையில் குறுக்கும், நெடுக்குமாக பயணிக்கின்றனர்.
சாலையை கடக்கும் வாகனங்கள் மீது கனரக வாகனங்கள் மோதி அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இங்கு போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த தானியங்கி சிக்னல் அமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள்கோரிக்கை விடுத்துள்ளனர்.