/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
உத்திரமேரூரை நகராட்சியாக தரம் உயர்த்த கோரிக்கை
/
உத்திரமேரூரை நகராட்சியாக தரம் உயர்த்த கோரிக்கை
ADDED : பிப் 01, 2024 11:13 PM
உத்திரமேரூர்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், உத்திரமேரூர் சிறப்பு நிலை பேரூராட்சியாக உள்ளது. பேரூராட்சியில் மொத்தம் உள்ள 18 வார்டுகளில், 40,000த்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.
நாளுக்கு நாள் மக்கள் தொகை குடியிருப்பு மற்றும் வணிக நிறுவனங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால், உத்திரமேரூர் சிறப்பு நிலை பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து, உத்திரமேரூர் பகுதியைச் சேர்ந்த சோழன் என்பவர் கூறியதாவது:
காஞ்சிபுரம் மாவட்டத்தில், குன்றத்துார் மற்றும் ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சிகள் நகராட்சியாக தரம் உயர்த்த அரசு நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது. பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த 30,000 மக்கள் தொகை போதுமானதாகும்.
உத்திரமேரூரில் 40,000த்துக்கும் மேற்பட்ட மக்கள் உள்ளனர். எனவே, பாதாள சாக்கடை போன்ற அடிப்படை கட்டமைப்புகள் மேற்கொள்ளும் வகையில், உத்திரமேரூர் சிறப்புநிலை பேரூராட்சியை, நகராட்சியாக தரம் உயர்த்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

