/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பழையசீவரத்தில் கைவிடப்பட்ட சாலையை இணைப்பு சாலையாக பயன்படுத்த கோரிக்கை

ADDED : டிச 11, 2024 11:00 PM

வாலாஜாபாத்:சென்னை- கன்னியாகுமரி தொழிற்தட திட்டத்தின் கீழ், நெடுஞ்சாலைத்துறை சார்பில், செங்கல்பட்டு- காஞ்சிபுரம் சாலை விரிவாக்கப் பணி மேற்கொள்ளப்படுகிறது.
இப்பணியின் போது, வாலாஜாபாத் அடுத்த பழையசீவரம் மலை பேருந்து நிறுத்தம் அருகே ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த சாலை கைவிடப்பட்டது. அதற்கு மாறாக அச்சாலையின் அருகாமையிலான நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் புதிய சாலை அமைக்கப்பட்டுள்ளது. கைவிடப்பட்ட சாலை பகுதியில் மண் தேவைக்காக பள்ளம் தோண்டி மண் எடுக்கப்பட்டு தற்போது மண் பாதையாக உள்ளது.
இந்நிலையில், அப்பகுதியினர் தங்கள் ஊரில் இருந்து, பழையசீவரம் மலை பேருந்து நிறுத்தத்திற்கு சென்று வர, கைவிடப்பட்ட பழைய சாலை வழியை பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது.
இதனால், மழைக் காலத்தில் அந்த வழி சகதியாகி விடுவதால், பேருந்து நிறுத்தத்திற்கு சென்று வரும் பயணியர் அவதிக்குள்ளாகின்றனர்.
எனவே, பழையசீவரத்தில் கைவிடப்பட்ட பழைய சாலையை, மீண்டும் சீரமைத்து இணைப்பு சாலையாக பயன்பாட்டிற்கு கொண்டு வர அப்பகுதி வாசிகள் மற்றும் பழையசீவரம் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.