/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
குறுகிய சாலை அகலப்படுத்த கோரிக்கை
/
குறுகிய சாலை அகலப்படுத்த கோரிக்கை
ADDED : டிச 23, 2024 01:44 AM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் - எண்டத்துார் சாலையில், பழத்தோட்டம் கூட்டுச்சாலை உள்ளது. இப்பகுதியில் இருந்து, நெல்லி கிராமத்திற்கு செல்லும் இணைப்பு சாலை உள்ளது.
நெல்லி மற்றும் சுற்றுவட்டார கிராமத்தினர் இச்சாலையை பயன்படுத்தி உத்திரமேரூர், மதுராந்தகம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
இச்சாலையின் இருபுறமும் செடி, கொடிகள் அதிகம் வளர்ந்துள்ளதால், சாலையோர பகுதியில் வாகனங்களை இயக்க முடியாத நிலை உள்ளது.
மேலும், குறுகிய சாலையில் எதிரே வரும் வாகனங்கள் ஒன்றையொன்று கடக்க இயலாமல் வாகன ஓட்டிகள் திணறுகின்றனர்.
இச்சாலையில் மின்வசதியும் இல்லாததால், இரவு நேரங்களில் நடந்து செல்வோர் அச்சப்படுவதோடு, வாகன ஓட்டிகள் விபத்திற்கு உள்ளாகின்றனர்.
எனவே, நெல்லி கிராம சாலையோர செடி, கொடிகள் அகற்றி, சாலையை அகலப்படுத்தி, மின்வசதி ஏற்படுத்த வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வலியுறுத்தி உள்ளனர்.