/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மாநகராட்சி குப்பை கிடங்கு தொடர்ந்து எரிவதால் சுற்றுப்புறத்தினருக்கு கண் எரிச்சல், சுவாச கோளாறு
/
மாநகராட்சி குப்பை கிடங்கு தொடர்ந்து எரிவதால் சுற்றுப்புறத்தினருக்கு கண் எரிச்சல், சுவாச கோளாறு
மாநகராட்சி குப்பை கிடங்கு தொடர்ந்து எரிவதால் சுற்றுப்புறத்தினருக்கு கண் எரிச்சல், சுவாச கோளாறு
மாநகராட்சி குப்பை கிடங்கு தொடர்ந்து எரிவதால் சுற்றுப்புறத்தினருக்கு கண் எரிச்சல், சுவாச கோளாறு
ADDED : மே 06, 2025 12:38 AM

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள 51 வார்டுகளில், 1,025க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இந்த தெருக்களில் உள்ள வீடுகள் வணிக கட்டடங்களில் இருந்து குப்பை சேகரிக்கும் பணியை, தனியார் நிறுவனத்திடம் மாநகராட்சி நிர்வாகம் ஒப்படைத்துள்ளது. இதில், மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சேகரமாகும் குப்பை, திருவீதிபள்ளம் பகுதியில் மலை போல கொட்டப்பட்டு வருகிறது
இந்த குப்பை அடிக்கடி தீப்பிடித்து எரிவதால், குப்பையில் இருந்து வெளியேறும் புகை திருவீதிபள்ளம், திருக்காலிமேடு, அரிஹந் அவென்யூ உள்ளிட்ட பகுதியில் பரவுகிறது.
இதனால், இப்பகுதியில் வசிப்போருக்கு கண் எரிச்சல், சுவாச கோளாறு போன்றவை ஏற்படுவது மட்டுமல்லாமல், சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதாக குப்பை கிடங்கை சுற்றி வசிப்பவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீயால், திருவீதிபள்ளம் முழுதும் புகை மண்டலமாக மாறியது. இதனால், அப்பகுதிவாசிகள் அவதிக்குள்ளாகினர்.
இந்நிலையில், நேற்று காலை, அப்பகுதி தி.மு.க., கவுன்சிலர் சந்துரு, மாநகராட்சி கமிஷனரிடம் இதுகுறித்து புகார் தெரிவித்தார். இதையடுத்து கமிஷனர் நவேந்திரன், மாநகர சுகாதார அலுவலர் அருள்நம்பி மற்றும் மாநகராட்சி சுகாதார பிரிவு அலுவலர்கள் திருவீதிபள்ளம் குப்பை கிடங்கிற்கு ஆய்வு செய்ய சென்றனர்.
அப்போது, வார்டு கவுன்சிலர் சந்துரு மற்றும் அப்பகுதிவாசிகள், குப்பை கிடங்கில் அடிக்கடி ஏற்படும் தீயால் குழந்தைகள், முதியோருக்கு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. குப்பை கிடங்கில் ஏற்பட்டுள்ள தீயை உடனடியாக அணைக்க வேண்டும். மீண்டும் தீப்பிடிக்காமல் இருக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
இதையடுத்து அப்பகுதிவாசிகளிடம் மாநகராட்சி கமிஷனர் நவேந்திரன் பேசியதாவது:
குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீயை அணைக்க தீயணைப்பு துறையினர் வாயிலாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குப்பை கிடங்கிற்கு தீ வைப்பவர்களை கண்டறிய இப்பகுதியில், 'சிசிடிவி' கேமராக்கள் வைக்கப்படும். மீண்டும் தீப்பிடிக்காமல் இருப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.