/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மின்விளக்கு வசதி இல்லாத சாலை கே.எம்.அவென்யூ வாசிகள் அச்சம்
/
மின்விளக்கு வசதி இல்லாத சாலை கே.எம்.அவென்யூ வாசிகள் அச்சம்
மின்விளக்கு வசதி இல்லாத சாலை கே.எம்.அவென்யூ வாசிகள் அச்சம்
மின்விளக்கு வசதி இல்லாத சாலை கே.எம்.அவென்யூ வாசிகள் அச்சம்
ADDED : ஜன 11, 2025 11:20 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி 29வது வார்டு கே.எம்.அவென்யூ, விரிவு பகுதி மற்றும் ஸ்ரீரங்கராஜ வீதியில், 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. சின்ன காஞ்சிபுரம் வேகவதி தெருவில் இருந்து இப்பகுதிக்கு செல்லும் சாலையில், இரவு நேரத்தில் வெளிச்சம் தரும் வகையில், மின்கம்பம் அமைத்து மின்விளக்கு வசதி ஏற்படுத்தப்படவில்லை.
இதனால், இரவு நேரத்தில் அப்பகுதியில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மேலும், சாலையோரம் செடி, கொடிகள் அதிகளவில் வளர்ந்துள்ளதால், அதில் தஞ்சமடைந்துள்ள விஷ ஜந்துக்கள் இரவு நேரத்தில் குடியிருப்புகளுக்குள் நுழைகின்றன.
இதனால், இரவு நேரத்தில் டியூஷன் முடிந்து வீடு திரும்பும் பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர் மற்றும் பணிபுரிந்து வீடு திரும்பும் பெண்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
எனவே, வேகவதி தெருவில் இருந்து கே.எம்.அவென்யூவிற்கு செல்லும் சாலையில், புதிதாக மின் கம்பங்கள் அமைத்து மின்விளக்கு வசதி ஏற்படுத்த மாநகராட்சி நிர்வாகம் மற்றும் மின்வாரியத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.