/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மழைநீர் வடிகால் பணி அரைகுறை மாம்பாக்கம் பகுதிவாசிகள் அவதி
/
மழைநீர் வடிகால் பணி அரைகுறை மாம்பாக்கம் பகுதிவாசிகள் அவதி
மழைநீர் வடிகால் பணி அரைகுறை மாம்பாக்கம் பகுதிவாசிகள் அவதி
மழைநீர் வடிகால் பணி அரைகுறை மாம்பாக்கம் பகுதிவாசிகள் அவதி
ADDED : ஜன 28, 2025 11:28 PM

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்தில் மாம்பாக்கம் ஊராட்சி அமைந்துள்ளது. ஸ்ரீபெரும்புதுார் சிப்காட் தொழில் பூங்காவின் அங்கமாக விளங்கும் இந்த ஊராட்சியில் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. இதனால், வடமாநிலத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.
இப்பகுதி வாசிகளின் அடிப்படை தேவைகள் பூரத்தி செய்யப்படமால் உள்ளது. மழைநீர் வடிகால், சாலை வசதி உள்ளிட்டவை இப்பகுதிவாசிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்து செல்லும் மாம்பாக்கம் பிரதான சாலையின் ஒருபுறம் மழைநீர் வடிகால் கட்டப்பட்டள்ளது. மறுபுறத்தில் மழைநீர் வடிகால் வசதி இல்லாததால், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், சாலையில் வழிந்தோடி சீர்கேடு ஏற்பட்டது.
இதனால், பள்ளி, கல்லுாரி மாணவ -- மாணவர்கள் உட்பட அப்பகுதிவாசிகள் கழிவுநீரில் நடந்து செல்ல வேண்டிய அவலநிலை இருந்தது. இதனால், பிரதான சாலையின் மறுபுறமும் மழைநீர் வடிகால் அமைக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்தனர்.
அதன்படி, கடந்த மாதம் வடிகால் அமைக்கும் பணி துவங்கப்பட்டது. ஆனால், வடிகால் பணிகள் அரைகுறையாக விடப்பட்டுள்ளது. மழைநீர் வடிகால் அமைக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் கழிவுநீர் தேங்கியுள்ளதால், அப்பகுதியில் கொசு அதிகரித்து, கொசுக்கடி தொல்லையில் பகுதிவாசிகள் அவதியடைந்து வருகின்றனர்.
அதேபோல், மழைநீர் கால்வாய் அமைக்க தேண்டப்பட்ட பள்ளத்திற்கு தடுப்பு இல்லாமல் உள்ளதால், அவ்வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
எனவே, மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, குடியிருப்பு வாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.