/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வரட்டி தட்டும் இடமான குளம் பெரியநத்தம் வாசிகள் கவலை
/
வரட்டி தட்டும் இடமான குளம் பெரியநத்தம் வாசிகள் கவலை
வரட்டி தட்டும் இடமான குளம் பெரியநத்தம் வாசிகள் கவலை
வரட்டி தட்டும் இடமான குளம் பெரியநத்தம் வாசிகள் கவலை
ADDED : ஜன 30, 2025 11:47 PM

காலுார், காஞ்சிபுரம் ஒன்றியம் காலுார் ஊராட்சி, பெரியநத்தம் கிராமத்தில் கங்கையம்மன் கோவில் உள்ளது.
பழமையான இக்குளம், அப்பகுதியின் நிலத்தடிநீர் ஆதாரமாக விளங்கிவந்தது.
இக்குளத்தில் செடி, கொடிகள் வளர்ந்துள்ளன. இதை துார்வாரி சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து, காஞ்சிபுரம் ஊரக வளர்ச்சி துறை சார்பில், 12 லட்சத்து 52 ஆயிரத்து 729 ரூபாய் செலவில், கடந்த 2021ம் ஆண்டு குளம் சீரமைக்கப்பட்டது.
இந்நிலையில், முறையான பராமரிப்பு இல்லாததால், குளத்திற்கு மழைநீர் வரும் கால்வாயிலும், குளத்திலும் செடி, கொடிகள், மரங்கள் வளர்ந்துள்ளன. இதனால், கடந்தாண்டு பெய்த பருவமழைக்கு குளம் முழுமையாக நிரம்பவில்லை. லட்சக்கணக்கான ரூபாய் செலவில் சீரமைக்கபட்ட குளக்கரையின் சுவர், மாட்டுச்சாணத்தால் வறட்டி தட்டும் இடமாக மாறியுள்ளது.
எனவே, புதர்மண்டி வீணாகும் கங்கையம்மன் கோவில் குளத்தை சீரமைத்து, முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.