/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஆக்கிரமிப்பின் பிடியில் வல்லப்பாக்கம் அல்லிக்குளம் பயன்படுத்த முடியாமல் பகுதி மக்கள் தவிப்பு

ADDED : டிச 26, 2025 06:10 AM

வாலாஜாபாத்: வல்லப்பாக்கத்தில், அல்லிக்குளத்தின் ஒரு பகுதி கரையில் வேலி அமைத்து ஆக்கிரமித்துள்ளதால், குளத்தை அப்பகுதி மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
வாலாஜாபாத் பேரூராட்சி, 5வது வார்டுக்கு உட்பட்ட வல்லப்பாக்கம் கிராமத்தில், பேரூராட்சிக்கு சொந்தமான 1 ஏக்கர் பரப்பிலான அல்லிக்குளம் உள்ளது. அப்பகுதியின் நிலத்தடி நீர் ஆதாரமாகவும், கிராம மக்கள் குளிக்க மற்றும் துணி துவைக்க இக்குளம் பயன்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டில், 69 லட்சம் ரூபாய் செலவில் இக்குளம் துார்வாரி, கரையை சுற்றி பலப்படுத்தி, கற்கள் பதித்தல் மற்றும் குளத்திற்கான வரத்து கால்வாய் சீரமைத்தல் உள்ளிட்ட பணிகளை பேரூராட்சி மேற்கொண்டது.
இந்நிலையில், இக்குளத்தங்கரையின் ஒரு பகுதியை தனக்கு சொந்தமானது எனக்கூறி, அப்பகுதியைச் சேர்ந்த தனிநபர் ஒருவர் வேலி அமைத்து ஆக்கிரமித்துள்ளார்.
குளத்தங்கரையின் பக்கவாட்டு பகுதியில் உள்ள படிக்கட்டுகளைச் சேர்த்து வேலி அமைத்துள்ளார். இதனால், ஏறி, இறங்க வழி இல்லாமல், அப்பகுதியினர் குளத்தை பயன்படுத்த இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, வாலாஜாபாத் பேரூராட்சி நிர்வாகி ஒருவர் கூறியதாவது:
குளக்கரை ஆக்கிரமிப்பு குறித்து, அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, வருவாய் துறை மற்றும் மாவட்ட நிர்வாக கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். ஆக்கிரமிப்பை அகற்றி குளத்தை பயன்பாட்டிற்கு விட, விரைந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.