/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மூளை சாவு ஏற்பட்டவரின் உடலுக்கு வருவாய் துறையினர் மரியாதை
/
மூளை சாவு ஏற்பட்டவரின் உடலுக்கு வருவாய் துறையினர் மரியாதை
மூளை சாவு ஏற்பட்டவரின் உடலுக்கு வருவாய் துறையினர் மரியாதை
மூளை சாவு ஏற்பட்டவரின் உடலுக்கு வருவாய் துறையினர் மரியாதை
ADDED : ஏப் 01, 2025 12:06 AM
காஞ்சிபுரம், ஒரகடம் அடுத்த, வளத்தஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த குமார் மகன் தனுஷ், 22. இவர், 'ஹோண்டா ஷைன்' இருசக்கர வாகனத்தில், மார்ச் -27ம் தேதி இரவு, வளத்தஞ்சேரி- - தத்தனுார் சாலையில் சென்றுக் கொண்டிருந்தார்.
அப்போது, இருசக்கர வாகனம் நிலை தடுமாறி விழுந்ததில், பலத்த காயம் ஏற்பட்டது. அந்த வழியாக சென்றவர்கள், காயமடைந்தவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்ல தீவிர சிகிச்சைக்காக, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற்று வந்தார். மூளைச் சாவு ஏற்பட்டதில், அவரது உறவினர்கள் உடல் உறுப்புகளை தானமாக அளித்தனர்.
இதையடுத்து, ஸ்ரீபெரும்புதுார் வருவாய் துறையினர் மலர் வளையம் வைத்து அரசு சார்பில் மரியாதை செலுத்தினர்.