ADDED : ஏப் 26, 2025 01:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீபெரும்புதுார்:வருவாய் மற்றும் மேலான்மைத் துறை, நில அளவைத்துறை உள்ளிட்ட அனைத்து நிலையான அலுவலர்களின் உயிர் மற்றும் உடைமைகளை காக்க, சிறப்பு பணிப் பாதுக்காப்பு சட்டம் நிறைவேற்றுதல், காலிப் பணியிடங்களை நிரப்புதல், மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்குதல், கருணை அடிப்படையிலான பணி நியமன உச்ச வரம்பை 25 சதவீதமாக உயர்த்துதல் உள்ளிட்ட எட்டு அம்ச கோரிக்கை வலியுறுத்தி, ஸ்ரீபெரும்புதுார் தாசில்தார் அலுவலக வளாகத்தில் ஸ்ரீபெரும்புதுார் ஒன்றிய வருவாய் துறை கூட்டமைப்பினர் சார்பில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் செண்பகம் தலைமையில், கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் அலுவலக உதவியாளர்கள், தட்டச்சர்கள், நில அளவையர்கள் 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

