/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மேம்பால மின்கம்பத்தில் கட்டப்பட்டுள்ள விளம்பர பதாகைகளால் விபத்து அபாயம்

ADDED : அக் 27, 2024 12:33 AM

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் சாலை, வண்டலுார் -- வாலாஜபாத் சாலைகள் இணையும் ஒரகடம் நான்குசாலை சந்திப்பில் மேம்பாலம் உள்ளது. மேம்பாலம் வழியாக, காஞ்சிபுரம், வேலுார் உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றனர்.
இந்த நிலையில், மேம்பாலத்தின் மீது, இரு புறங்களில் உள்ள மின்கம்பங்களில் தனியார் வீட்டு மனை விற்பனை குறித்த விளம்பர பதாகைகள் தொடர்ச்சியாக கட்டப்பட்டுள்ளன.
இதனால், மேம்பாலத்தில் செல்லும் வாகன ஓட்டிகள், விளம்பர பதாகைகளால் கவன சிதறல் ஏற்பட்டு, விபத்து நடக்கும் அபாயம் உள்ளது. மேலும், காற்று வேகமான வீசும் போது விளம்பர பதாகைகள் அறுந்து வாகன ஓட்டிகள் மீது விழும் சூழல் உள்ளது.
எனவே, வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பும் வண்ணம், மேம்பாலத்தின் மீது கட்டப்பட்டுள்ள விளம்பர பதாகைகளை அகற்ற, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.