/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களால் விபத்து அபாயம்
/
இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களால் விபத்து அபாயம்
இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களால் விபத்து அபாயம்
இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களால் விபத்து அபாயம்
ADDED : பிப் 26, 2024 03:44 AM

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் - அரக்கோணம் சாலையில், வெள்ளைகேட் பேருந்து நிறுத்தம் அருகே, சாலை இருபுறமும் வாகனங்கள் நிறுத்தும் அளவிற்கு, இடவசதி உள்ளது.
இருப்பினும், லாரி ஓட்டுனர்கள் டீ குடிக்கவும், நொறுக்கு தீனி சாப்பிடுவதற்கும், சாலை நடுவே லாரிகளை நிறுத்திவிட்டு செல்கின்றனர்.
இதனால், அரக்கோணம் மார்க்கத்தில் இருந்து, காஞ்சிபுரம் நோக்கி செல்லும் வாகனங்கள் மற்றும் வெள்ளைகேட் மேம்பாலம் மற்றும் காஞ்சிபுரத்தில் இருந்து அரக்கோணம் செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயத்தில் உள்ளன.
எனவே, வெள்ளைகேட் மேம்பாலம் அருகே, சாலை ஓரம் நிறுத்தப்படும் வாகனங்களை தடுக்க சம்பந்தப்பட்ட போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் இடையே கோரிக்கை எழுந்துள்ளது.