/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலையில் வரிசைகட்டி நிற்கும் வாகனங்களால் விபத்து அபாயம்
/
சாலையில் வரிசைகட்டி நிற்கும் வாகனங்களால் விபத்து அபாயம்
சாலையில் வரிசைகட்டி நிற்கும் வாகனங்களால் விபத்து அபாயம்
சாலையில் வரிசைகட்டி நிற்கும் வாகனங்களால் விபத்து அபாயம்
ADDED : நவ 30, 2024 12:56 AM

மதுரமங்கலம்:மதுரமங்கலம் அடுத்த, கண்ணன்தாங்கல் கிராமத்தில், தனியார் டயர் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு, டயர் லோடு ஏற்றி செல்ல, தினசரி கன்டெய்னர் லாரிகள் வந்து செல்கின்றன.
தனியார் தொழிற்சாலைக்குள் செல்வதற்கு, லாரி ஓட்டுனர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி உள்ளன. இதுபோன்ற நேரங்களில், கண்ணன்தாங்கல் - குணகரம்பாக்கம் மற்றும் பள்ளூர் - சோகண்டி சாலையோரம் நீண்ட நேரம், லாரிகள் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகின்றன.
இதனால், கண்ணன்தாங்கல் செல்லும் சாலையில், மற்றொரு சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு உள்ளது.
எனவே, சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களை தவிர்க்க, சம்பந்தப்பட்ட துறையினர் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் இடையே கோரிக்கை எழுந்துள்ளது.