/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பாலாற்றில் கழிவுநீர் கலப்பு நீர்வளம் மாசுபடும் அபாயம்
/
பாலாற்றில் கழிவுநீர் கலப்பு நீர்வளம் மாசுபடும் அபாயம்
பாலாற்றில் கழிவுநீர் கலப்பு நீர்வளம் மாசுபடும் அபாயம்
பாலாற்றில் கழிவுநீர் கலப்பு நீர்வளம் மாசுபடும் அபாயம்
ADDED : ஜூன் 20, 2025 11:19 PM

வாலாஜாபாத்:வாலாஜாபாத் பாலாற்று படுகையில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
காஞ்சிபுரத்தில் இருந்து பல்வேறு கிராமங்கள் வழியாக வாலாஜாபாத் வந்தடையும் பாலாறு, புளியம்பாக்கம், அங்கம்பாக்கம் வழியாக மூன்று ஆறுகள் சங்கமிக்கும் திருமுக்கூடலில் கலக்கிறது.
இதனிடையே, வாலாஜாபாத் ராஜவீதி சாலையையொட்டி உள்ள பாலாற்றங்கரையொட்டி நுாற்று கணக்கான கடைகள் மற்றும் குடியிருப்புகள் உள்ளன.
இதில், சில வீடுகள் மற்றும் கடைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரை முறையாக கழிவுநீர் தொட்டி மூலம் தேக்கி பராமரிக்காமல் பின்புறம் உள்ள பாலாற்று படுகையில் கழிவுநீரை விடுவது நீண்ட காலமாக தொடர்கிறது.
இதனால், பாலாற்றில் கழிவுநீர் தேங்கி சாக்கடையாகி, மழை நேரங்களில் சாக்கடை ஆற்று நீரோடு கலந்து பாலாற்றின் நீர்வளம் பாதித்து மாசடைந்து வருவதாக பல தரப்பினரும் ஆதங்கப்படுகின்றனர்.
இந்நிலையில், வாலாஜாபாத் ரவுண்டனா பேருந்து நிறுத்தம் அருகே பாலாற்றங்கரையொட்டி ேஹாட்டல் ஒன்று செயல்படுகிறது.
இந்த உணவகத்தின் வாயிலாக வெளியேற்றப்படும் கழிவுநீர் பாலாற்றில் விடப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து, துறை ரீதியான அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.