/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலையில் வழியும் கழிவுநீரால் நிலத்தடிநீர் மாசடையும் அபாயம்
/
சாலையில் வழியும் கழிவுநீரால் நிலத்தடிநீர் மாசடையும் அபாயம்
சாலையில் வழியும் கழிவுநீரால் நிலத்தடிநீர் மாசடையும் அபாயம்
சாலையில் வழியும் கழிவுநீரால் நிலத்தடிநீர் மாசடையும் அபாயம்
ADDED : ஆக 25, 2025 11:23 PM

காஞ்சிபுரம் காஞ்சிபுரம் வெள்ளைகுளம் தெருவில், பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, சாலையில் வழிந்தோடும் கழிவுநீர், ஆழ்துளை குழாய் மூலம், நிலத்தடிக்குள் செல்வதால், நீர் மாசடையும் சூழல் உள்ளது.
காஞ்சிபுரம் வெள்ளைகுளம் தென்கரை தெருவில், 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இப்பகுதியில் வசிப்பவர்களின் கூடுதல் குடிநீர் தேவைக்காக மாநகராட்சி நிர்வாகம் சார்பில், செல்வ விநாயகர் கோவில் அருகில் ஆழ்துளை குழாயுடன், குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆழ்துளை குழாய் அருகில், பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு,'மேன்ஹோல்' வழியாக வெளியேறும் கழிவுநீர், ஆழ்து ளை குழாயை ஒட்டி செல்கிறது.
இதனால், குழாய் இடைவெளி மூலம் நிலத்தடிக்குள் நேரடியாக செல்லும் கழிவுநீரால், அப்பகுதியில் நிலத்தடி நீர் மாசடையும் சூழல் உள்ளது.
இதனால், மாசடைந்த குடிநீரை பயன்படுத்துவதால், அப்பகுதியினருக்கு, பல்வேறு நோய் பரவும் சூழல் உள்ளது.
எனவே, வெள்ளைகுளம் தென்கரை தெருவில், பாதாள சாக்கடையில் ஏற்பட்டுள்ள அடைப்பை நீக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.