sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 23, 2025 ,ஐப்பசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

விக்ரமநல்லுாரில் பாதை துண்டிப்பு; கொருக்கந்தாங்கலில் மதகு உடைப்பு மழை காரணமாக மாவட்டம் முழுதும் திண்டாட்டம்

/

விக்ரமநல்லுாரில் பாதை துண்டிப்பு; கொருக்கந்தாங்கலில் மதகு உடைப்பு மழை காரணமாக மாவட்டம் முழுதும் திண்டாட்டம்

விக்ரமநல்லுாரில் பாதை துண்டிப்பு; கொருக்கந்தாங்கலில் மதகு உடைப்பு மழை காரணமாக மாவட்டம் முழுதும் திண்டாட்டம்

விக்ரமநல்லுாரில் பாதை துண்டிப்பு; கொருக்கந்தாங்கலில் மதகு உடைப்பு மழை காரணமாக மாவட்டம் முழுதும் திண்டாட்டம்


ADDED : அக் 22, 2025 11:26 PM

Google News

ADDED : அக் 22, 2025 11:26 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழை காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. உத்திரமேரூர் ஏரி உபரி நீர் திறப்பால், விக்ரமநல்லுாரில் பாதை துண்டிப்பால், கிராம மக்கள் பேராட்டம் நடத்தியதை தொடர்ந்து, கொருக்கந்தாங்கல் மதகு உடைந்ததால், 300 மணல் மூட்டைகள் கொண்டு சீரமைக்கப்பட்டன.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் நான்கு நாட்களாகவே தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக, இரு நாட்களாக கனமழை பெய்வதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.

மழை காரணமாக, காஞ்சிபுரம் நகர சாலைகளில், மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மாவட்டம் முழுதும் நேற்றும் கனமழை பெய்தது.

காஞ்சிபுரம் காந்தி சாலை, மேட்டுத்தெரு, மூங்கில் மண்டபம், காவலான்கேட் என நகரின் முக்கிய இடங்களில் பாதாள சாக்கடை கழிவுநீருடன், மழைநீரும் கலந்து சாலையில் ஓடியதால், நகரவாசிகள், வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

மழை காரணமாக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை அருகே செயல்படும் அம்மா உணவகத்தின் பால் சீலிங் நேற்று அதிகாலை உடைந்து விழுந்தது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 274 ஊராட்சிகளிலும் பருவ மழைக்கு பல்வேறு தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஊரக வளர்ச்சித் துறை உயரதிகாரிகள், வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு, அறிவுரை வழங்கியுள்ளனர்.

குறிப்பாக, சிறுபாலம் மற்றும் தண்ணீர் வெளியேறும் கால்வாய்களில், துார்வாரப்பட்டு தடையின்றி தண்ணீர் வெளியேற வழி வகை செய்ய வேண்டும் எனவும் கால்வாய் அடைப்பு ஏற்படும் போது, பொக்லைன் இயந்திரங்களின் உதவியுடன் அடைப்பு நீக்குவதற்கு, வாகனங்கள் தயார் நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

போராட்டம் உத்திரமேரூர் ஏரி 20 அடி ஆழமும், 1.1 டி.எம்.சி., கொள்ளளவும் உடையது. உத்திரமேரூர் ஏரியில் 16 மதகுகள், 3 கலங்கல்கள், 2 அவசர கால மதகுகள் உள்ளன. ஏரி முழுதுமாக நிரம்பும் போது, 15 கிராமங்களில் 5,500 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. உத்திரமேரூர் ஏரி முழுமையாக நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது.

ஏரிக்கு நீர்வரத்து அதிகமானதால், முன்னெச்சரிக்கையாக ஏரியில் உள்ள இரண்டு அவசர கால மதகை, நேற்று காலை 8:00 மணிக்கு திறந்தனர். அப்போது, விக்ரமநல்லுார் பகுதியில் செல்லும், நீர்வரத்து கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால், கால்வாய் மீதுள்ள விக்ரமநல்லுார் செல்லும் பாதை துண்டிக்கப்பட்டது. இந்நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் வாகனங்களில், அவ்வழியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

வெள்ளப்பெருக்கினால் பாதை துண்டிக்கப்பட்டதை கண்டித்து, விக்ரமநல்லுார் கிராம மக்கள் கால்வாயில் செல்லும் தண்ணீரில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த, உத்திரமேரூர் தாசில்தார் சுந்தர், வட்டார வளர்ச்சி அலுவலர் சூரியா போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு நடத்தினர். இதையடுத்து, கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

300 மணல் மூட்டைகள் உத்திரமேரூர் ஒன்றியம், மருத்துவன்பாடி ஊராட்சியில் கொருக்கந்தாங்கல் துணை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ஊரக வளர்ச்சித் துறையின் காட்டுப்பாட்டிலான, 120 ஏக்கர் பரப்பளவில் ஏரி உள்ளது.

இந்த ஏரியில் நிரம்பும் தண்ணீரை கொண்டு, 250 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த ஏரிக்கு, 10 நாட்களாக, உத்திரமேரூர் ஏரியில் இருந்து நீர்வரத்து காரணமாக, ஏரி முழுதுமாக நிரம்பி இரண்டு நாட்களாக கலங்கல் வழியே, உபரி நீர் வெளியேறி வருகிறது.

இந்நிலையில், நேற்று அதிகாலை 4:00 மணியளவில், நான்கு ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட இரண்டாவது மதகில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி வந்தது. இதை கண்ட அப்பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் உடைந்த மதகு பகுதியில் மரக்கிளைகள், வைக்கோல் போட்டு அடைத்தனர்.

இருப்பினும், மதகு வழியே தொடர்ந்து தண்ணீர் வெளியேறி வந்தது. இதையடுத்து, ஊராட்சி நிர்வாகத்தின் வாயிலாக 300 மணல் மூட்டைகள் கொண்டு வந்து, பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் உடைந்த மதகு பகுதியில் அடைத்து தண்ணீர் வெளியேறுவதை தடுத்து நிறுத்தினர். ஐந்து மணி நேர போராட்டத்திற்கு பின், உடைப்பு ஏற்பட்ட மதகு சரி செய்யப்பட்டது.

மழை பதிவு (செ.மீட்டரில்) ஊர் மழையளவு வாலாஜாபாத் 11.7 ஸ்ரீபெரும்புதுார் 8.8 உத்திரமேரூர் 8.2 செம்பரம்பாக்கம் 7.2 காஞ்சிபுரம் 4.7 குன்றத்துார் 3.8



- நமது நிருபர் குழு -:






      Dinamalar
      Follow us