/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பாலாறு பாலத்தில் சாலை சேதம் செவிலிமேடில் விபத்து அபாயம்
/
பாலாறு பாலத்தில் சாலை சேதம் செவிலிமேடில் விபத்து அபாயம்
பாலாறு பாலத்தில் சாலை சேதம் செவிலிமேடில் விபத்து அபாயம்
பாலாறு பாலத்தில் சாலை சேதம் செவிலிமேடில் விபத்து அபாயம்
ADDED : ஏப் 06, 2025 01:27 AM

செவிலிமேடு:காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில், செவிலிமேடிற்கும், புஞ்சையரசந்தாங்கலுக்கும் இடையே பாலாறு குறுக்கிடும் இடத்தில், 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பாலம் உள்ளது. இந்த பாலம் வழியாக பெருநகர், மானாம்பதி, வந்தவாசி, திருவண்ணாமலை, அய்யங்கார்குளம், செய்யாறு, திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு, தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
வாகன போக்குவரத்து அதிகம் உள்ள இந்த பாலத்தின் சாலையோரத்தில், ஒரு பகுதி சேதமடைந்துள்ளது. இதனால், இப்பாலத்தில் இடது பக்க சாலையோரம் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், சாலை சேதமடைந்த பகுதியை கண்டதும், திடீரென வலது பக்கம் வாகனத்தை திருப்பும்போது, பின்னால் வரும் வாகனம் மோதி விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.
மேலும், பாலத்தின் இணைப்பு பகுதியில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டுள்ளதாலும், விபத்து ஏற்படும் சூழல் உள்ளது.
எனவே, செவிலிமேடு பாலாறு பாலத்தில், சேதமடைந்த சாலையை சீரமைக்க நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.