ADDED : ஜன 07, 2025 07:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரபுரம் தெரு வழியாக பஞ்சுபேட்டை, கருப்படிதட்டடை, பருத்திகுளம் உள்ளிட்ட பகுதிக்கு ஏராளமானோர் சென்று வருகின்றனர். இச்சாலையில், கடந்த மாதம் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. மாநகராட்சி சார்பில், சாலையில் பள்ளம் தோண்டப்பட்டு, குடிநீர் குழாய் உடைப்பு சீரமைக்கப்பட்டது.
ஆனால், சாலையில் பள்ளம் தோண்டிய இடத்தை முறையாக சீரமைக்காமல், மண்ணால் மூடிவிட்டனர். இதனால், பள்ளம் தோண்டப்பட்ட இடத்தில் மண் உள்வாங்கியுள்ளது.
இதனால், கனரக வாகனம்பள்ளத்தில் சிக்கும் நிலை உள்ளது. எனவே, பள்ளத்தை சீரமைக்க வேண்டும்என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.