/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மண் அரிப்பால் சாலை படுமோசம் ஆரநேரி வாகன ஓட்டிகள் அவதி
/
மண் அரிப்பால் சாலை படுமோசம் ஆரநேரி வாகன ஓட்டிகள் அவதி
மண் அரிப்பால் சாலை படுமோசம் ஆரநேரி வாகன ஓட்டிகள் அவதி
மண் அரிப்பால் சாலை படுமோசம் ஆரநேரி வாகன ஓட்டிகள் அவதி
ADDED : டிச 22, 2024 12:17 AM

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், போந்துார் ஊராட்சியில் ஆரநேரி கிராமம் உள்ளது. இப்பகுதி வாசிகள் மற்றும் பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர், ஆரநேரி சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதுார், மாம்பாக்கம், சுங்குவார்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றனர். அதேபோல், வல்லம், ஒரகடம் சிப்காட் தொழிற்சாலைகளுக்கு செல்லும் பிரதான சாலையாக இச்சாலை உள்ளது.
இந்நிலையில், சமீபத்தில் பெய்த மழையினால் சாலை குண்டும் குழியுமான மாறியது. மேலும், சாலையோரங்களில் பல இடங்களில் மண் அரிப்பு ஏற்பட்டு, சாலை பெயர்ந்து பள்ளங்களாக உள்ளன.
இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் எதிர்பாராத விதமாக சாலையோர பள்ளத்தில் விபத்தில் சிக்கி சூழல் உள்ளது.
குறிப்பாக, இரவு நேரங்களில் எதிரே வரும் கனரக வாகனங்களுக்கு வழிவிட ஒதுங்கும் போது, சாலையோர பள்ளத்தில் விழுந்து காயமடைந்து வருகின்றனர்.
எனவே, மண் அரிப்பினால் ஏற்பட்ட பள்ளத்தில், மண்ணை கொட்டி சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.