/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலை சீரமைப்பு பணி புத்தகரத்தில் துவக்கம்
/
சாலை சீரமைப்பு பணி புத்தகரத்தில் துவக்கம்
ADDED : ஏப் 14, 2025 12:35 AM

வாலாஜாபாத்:வாலாஜாபாத் ஒன்றியம், புத்தகரத்தில் இருந்து, மருதம் வழியாக, ராஜகுளம் சென்றடையும் சாலை உள்ளது.
வாலாஜாபாத் சுற்றுவட்டார பகுதி மற்றும் செங்கல்பட்டு, ஒரகடம் பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை விரைவாக அடைவதற்கு இக்கிராம சாலை வழி பயன்பாடாக இருந்து வருகிறது.
இதனால், ஏராளமான வாகன ஓட்டிகள், இச்சாலையை பயன்படுத்தி, குறைந்த நேரத்தில் எளிதாக சென்னை - பெங்களூரு சாலையை அடைந்து, அங்கிருந்து பல பகுதிகளுக்கு பயணிக்கன்றனர்.
இந்நிலையில், இச்சாலையில் புத்தகரம் ஏரிக்கரையையொட்டி ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டு, இரண்டு ஆண்டுகளாக மிகவும் பழுதடைந்துள்ளது.
இதனால், இச்சாலை வழியாக பயணிக்கும் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வந்தனர்.
இதுகுறித்த செய்தி, நம் நாளிதழில் அவ்வப்போது வெளியானது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இச்சாலையில் புத்தகரம் ஏரிக்கரை அருகே துவங்கி, ஒன்றரை கி.மீ., துாரத்திற்கு சீரமைப்பு பணி செய்ய நபார்டு திட்ட நிதியின் கீழ், 90 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, இதற்கான முதற்கட்டப் பணி துவங்கப்பட்டு, சாலையில் ஜல்லி கற்கள் பதித்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.