/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
/
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
ADDED : ஜன 10, 2025 02:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம், தமிழகத்தில், ஜனவரி மாதம் முழுதும், தேசிய சாலை பாதுகாப்பு மாதமாககடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இதையொட்டி, காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி, காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் பன்னீர்செல்வம் தலைமையில் நேற்று நடந்தது.
இதில், தலைக்கவசம் அணிவதின் பயன் குறித்தும், சாலை பாதுகாப்பு விதிகள் குறித்து, விபத்தில்லாமல் வாகனம் ஓட்டுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.