/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஜல்லி கற்கள் கொட்டி ஒரு வாரமாகியும் சாலை அமைக்காததால் விபத்து அபாயம்

ADDED : செப் 23, 2025 12:25 AM

காஞ்சிபுரம்:ஜல்லி கற்கள் கொட்டி, ஒரு வாரமாகியும் புள்ளலுாரில் சாலை அமைக்காததால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது.
காஞ்சிபுரம் அடுத்த புள்ளலுார் கிராமத்தில் இருந்து, ராணிப்பேட்டை மாவட்டம் கணபதிபுரம் கிராமம் வழியாக, 3 கி.மீ., சித்துார் கிராமத்திற்கு செல்லும் சாலை உள்ளது.
புள்ளலுாரில் இருந்து கணபதிபுரம் வரையிலான இந்த சாலை, குண்டும் குழியுமாக இருந்து வந்தது. இதை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தினர்.
இதையடுத்து, வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி நிர்வாகம், முதல்வர் சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில் தேர்வு செய்து, சாலை சீரமைக்கும் பணியை துவக்கியது.
இன்னமும், ஜல்லி கற்கள் மட்டும் கொட்டப்பட்டதோடு சரி. ஒரு வாரத்திற்கு மேலாகியும் தார் கொட்டி சீரமைக்கப்படவில்லை.
இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், ஜல்லி கற்களால் நிலை தடுமாறி விழும் நிலையில் உள்ளனர்.
எனவே, தார், சிறு ஜல்லி கலந்து, புள்ளலுார் - கணபதிபுரம் சாலையை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.