/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சியில் குளமாக மாறிய சாலை மாநகராட்சி அதிகாரிகள் மெத்தனம்
/
காஞ்சியில் குளமாக மாறிய சாலை மாநகராட்சி அதிகாரிகள் மெத்தனம்
காஞ்சியில் குளமாக மாறிய சாலை மாநகராட்சி அதிகாரிகள் மெத்தனம்
காஞ்சியில் குளமாக மாறிய சாலை மாநகராட்சி அதிகாரிகள் மெத்தனம்
ADDED : நவ 18, 2024 01:40 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம், அப்பாராவ் தெரு வழியாக புதிய ரயில் நிலையம், தாமல்வார் தெரு, கோனேரிகுப்பம் உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் ஏராளமானோர் சென்று வருகின்றனர். வாகன போக்குவரத்து அதிகமுள்ள இச்சாலை சேதமடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது.
இதனால், சாதாரண மழைக்கே குளம்போல மழைநீர் தேங்குகிறது. மேலும், இச்சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பள்ளம் இருப்பது தெரியாமல் நிலைதடுமாறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.
மேலும், நாள்கணக்கில் தேங்கும் மழைநீரால், இப்பகுதியில் கொசுத் தொல்லை அதிகரித்து வருவதாக தெருவாசிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
எனவே, மழைநீர் தேங்காமல் இருக்க, சேதமடைந்த சாலையை ‛பேட்ச் ஒர்க்' பணியாக சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பாராவ் தெருவினர் வலியுறுத்தி உள்ளனர்.