/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பாதாள சாக்கடை பணிகளால் காஞ்சியில் சாலைகள் சேதம்
/
பாதாள சாக்கடை பணிகளால் காஞ்சியில் சாலைகள் சேதம்
ADDED : ஜூலை 23, 2025 12:55 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சியில், 300 கோடி ரூபாய் மதிப்பில், செவிலிமேடு, ஓரிக்கை, திருக்காலிமேடு போன்ற, புறநகர் பகுதிகளில், பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இப்பணிகளுக்காக, சாலையின் நடுவே, ஆள் இறங்கும் தொட்டி அமைக்கவும், குழாய் அமைக்கவும் பெரிய அளவிலான பள்ளங்கள் தோண்டப் படுகின்றன.
அதில், பாதாள சாக்கடை பணிகள் முடிந்த பின், அவை முறையாக மூடப்படாததால், சாலை முழுதும் சகதியாகவும் பெரிய அளவில் பள்ளமாகவும் உள்ளது.
பாதாள சாக்கடை பணிகள் நடந்த இடத்தின் அருகே வாகன ஓட்டிகள் செல்லவே அச்சப்படுகின்றனர். மாநகராட்சியின் 41வது வார்டில் உள்ள சாலைகள் படு மோசமாக உள்ளது.
பாதாள சாக்கடை பணிகள் நடந்த பகுதிக்கு புதிய சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு வரப்பெற்றதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கும் நிலையில், விரைவாக இப்பகுதிகளில் சாலை அமைத்து, வாகன ஓட்டிகள் விபத்தின்றி செல்ல வழிவகை செய்ய வேண்டும் என, அப் பகுதிவாசிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.