ADDED : ஏப் 13, 2026 06:09 AM

அ நிறம் | அளவு
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் - அரக்கோணம் - திருத்தணி வரை, 41 கி.மீ., இரு வழி சாலை உள்ளது.
இந்த சாலை, சென்னை - கன்னியாகுமரி தொழிற்தட திட்டத்தில், நான்கு வழி சாலையாக விரிவுபடுத்தும் பணி நடந்து வருகிறது.
தற்போது, காஞ்சிபுரம் - அரக்கோணம் சாலையில், ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலம் கூட்டு சாலை விரிவாக்க பணி சமீபத்தில் நடந்தது.
மேலும், சாலையோரம் செல்லும் மழைநீர் வடிகால்வாய் ஓரம், இரும்பிலான தடுப்பு கம்பி அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இரு தினங்களுக்கு முன் விஷ கண்டிகுப்பம் அருகே, அடையாளம் தெரியாத லாரி மோதி, தடுப்பு சேதமடைந்தது. இதனால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே, சேதமடைந்த சாலை தடுப்புகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
