/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலையோரம் எரிக்கப்படும் குப்பை ஒரகடத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பு
/
சாலையோரம் எரிக்கப்படும் குப்பை ஒரகடத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பு
சாலையோரம் எரிக்கப்படும் குப்பை ஒரகடத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பு
சாலையோரம் எரிக்கப்படும் குப்பை ஒரகடத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பு
ADDED : ஜன 13, 2025 12:48 AM

ஸ்ரீபெரும்புதுார்,:குன்றத்துார் ஒன்றியத்தில், சென்னக்குப்பம் ஊராட்சி உள்ளது. இங்கு, 2,000க்கும் அதிகமான வீடுகள், 100க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.
இங்குள்ள வீடுகள் மற்றும் கடைகளில் இருந்து சேகரமாகும் குப்பையை, ஊராட்சி துாய்மை பணியாளர்கள் டிராக்டர் வாயிலாக ஒரகடம் மேம்பாலம் அருகே, வண்டலுார் -- வாலாஜாபாத் சாலையை ஒட்டியுள்ள ஒரகடம் ஏரிக்கரையில் கொட்டுகின்றனர்.
அவ்வப்போது இரவு நேரங்களில் குப்பையை தீயிட்டு எரிக்கின்றனர். அது, பல நாட்களாக புகைந்து கொண்டே இருப்பதால், அப்பகுதி முழுதும் புகை மண்டலாமக மாறி சுற்றுசூழல் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
இதனால், வண்டலுார் - வாலாஜாபாத் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
தவிர, ஒரகடம் மேம்பாலம் அருகே, பேருந்திற்காக காத்திருக்கும் பயணியர், கண் எரிச்சல், மூச்சுத் திணறல் போன்ற பாதிப்பால் அவதி அடைந்து வருகின்றனர்.
எனவே, சென்னக்குப்பம் ஊராட்சியில் சேகரமாகும் குப்பையை, நவீன தொழில்நுடபத்தின் உதவியுடன், ‛பயோ மைனிங்' முறையில், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாத வகையில் அழிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.