/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலையோர பள்ளம் திருச்சக்கரபுரத்தில் அபாயம்
/
சாலையோர பள்ளம் திருச்சக்கரபுரத்தில் அபாயம்
ADDED : மே 21, 2025 12:48 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி, திருச்சக்கரபுரம் தெரு வழியாக ஆனந்தாபேட்டை, ரெட்டிப் பேட்டை, ரயில்வே சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிக்கு செல்வோர் சென்று வருகின்றனர்.
வாகன போக்குவரத்து நிறைந்த இச்சாலையில், தேவி எல்லையம்மன் கோவில் அருகில், நிலத்தடியில் மண் அரிப்பு ஏற்பட்டதால், சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், சாலையோரம் நடந்து செல்லும் பாதசாரிகளும், இருசக்கர வாகன ஓட்டிகளும் பள்ளத்தில் தவறி விழுந்து விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.
இந்த சாலை வழியாக செல்லும் கனரக வாகனங்கள், பள்ளத்தால் கவிழும் நிலை உள்ளது.
எனவே, திருச்சக்கரபுரம் தெருவில், சாலையோரம் மண் அரிப்பால் ஏற்பட்டுள்ள பள்ளத்தை மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.