/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காதலர் தினத்தில் ரோஜா விற்பனை ஜோர்
/
காதலர் தினத்தில் ரோஜா விற்பனை ஜோர்
ADDED : பிப் 15, 2025 12:24 AM

காஞ்சிபுரம்:காதலர் தினத்தையொட்டி, ரோஜாவின் தேவை அதிகரித்து இருந்ததால், ரோஜாவின் விலை பல மடங்கு உயர்ந்து இருந்தது.
காஞ்சிபுரம் பூக்கடை சத்திரத்திற்கு, ஓசூரில் இருந்து பெங்களூரூ ரோஜா வகைகளான தாஜ்மஹால், ஒயிட், எல்லோ, கிராண்ட் காலா, அவலான்ஜி, பஸ்ட் ரெட், பிங்க் நோபில்ஸ் உள்ளிட்ட பலவகை ரோஜா விற்பனைக்காக வரவழைக்கப்பட்டு இருந்தது.
கடந்த வாரம், காஞ்சிபுரம் பூக்கடைகளில், 20 ரோஜா பூக்கள் அடங்கிய ஒரு கட்டு 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. சில்லறை விலையில் ஒரு ரோஜா, 30 ரூபாய் வரை விற்கப்பட்டது.
நேற்று ஒரு கட்டு ரோஜாப்பூ 800 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சாலையோர பூ வியாபாரிகள், சில்லறை விலையில், ஒரு ரோஜாப்பூவை 100 ரூபாய்க்கு விற்பனை செய்தனர்.
விலை கணிசமாக உயர்ந்து இருந்தாலும், காதலர் தினத்தை கொண்டாடும் வகையில், காதலர்கள்100 ரூபாய் கொடுத்து ரோஜாவை வாங்கிச்சென்றதை காண முடிந்தது.

