/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கழிப்பறை கட்டடத்தில் வளர்ந்துள்ள அரச மர செடிகள்
/
கழிப்பறை கட்டடத்தில் வளர்ந்துள்ள அரச மர செடிகள்
ADDED : செப் 27, 2024 07:32 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம், ஓரிக்கை காந்தி நகரில், மாநகராட்சி சார்பில், கட்டப்பட்டுள்ள பொது கழிப்பறையை, வீட்டில் கழிப்பறை வசதி இல்லாத அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், மாநகராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காததால், கழிப்பறை கட்டடத்தின் சுவரில் அரச மர செடிகள் வளர்ந்துளளதால், சுவரில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இச்செடியின் வேர்கள் வேரூன்றி வளர்வதால், நாளடைவில் கட்டடம் வலுவிழக்கும் நிலை உள்ளது.
எனவே, பொது கழிப்பறை கட்டடத்தில் வளர்ந்துள்ள அரச மர செடிகளை வேருடன் அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.