/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பெருநகர் பாலத்தில் வளர்ந்துள்ள அரச மரச்செடிகள்
/
பெருநகர் பாலத்தில் வளர்ந்துள்ள அரச மரச்செடிகள்
ADDED : நவ 26, 2024 11:49 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்திரமேரூர்:காஞ்சிபுரம் - -வந்தவாசி நெடுஞ்சாலை, பெருநகர் பகுதியில் உள்ள செய்யாறு ஆற்றில் 20 ஆண்டுக்கு முன், பாலம் கட்டப்பட்டு, பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த பாலத்தின் வழியே வந்தவாசி, பெருநகர், காஞ்சிபுரம், மானாம்பதி, திருவண்ணாமலை ஆகிய பகுதிகளுக்கு, தினமும் 1,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்கின்றன.
நெடுஞ்சாலைத் துறையின் முறையான பராமரிப்பு இல்லாததால், பாலத்தில் அரச மரச்செடிகள் வளர்ந்து உள்ளன. இதனால், பாலத்தில் விரிசல் ஏற்பட்டு, அதன் உறுதித்தன்மை பாதிக்கும் நிலை உள்ளது.
எனவே, பாலத்தில் வளர்ந்துள்ள அரச மரச்செடிகளை அகற்ற, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.