/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ரூ.1 கோடி நலத்திட்ட உதவிகள் சேந்தமங்கலத்தில் வழங்கல்
/
ரூ.1 கோடி நலத்திட்ட உதவிகள் சேந்தமங்கலத்தில் வழங்கல்
ரூ.1 கோடி நலத்திட்ட உதவிகள் சேந்தமங்கலத்தில் வழங்கல்
ரூ.1 கோடி நலத்திட்ட உதவிகள் சேந்தமங்கலத்தில் வழங்கல்
ADDED : நவ 13, 2024 11:18 PM

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், சேந்தமங்கலம் ஊராட்சியில் நடந்த மக்கள் தொடர்பு திட்ட முகாமில், 106 பயனாளிகளுக்கு, 1.06 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி நேற்று வழங்கினார்.
ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், சேந்தமங்கலம் ஊராட்சியில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில், மக்கள் தொடர்பு திட்ட முகாம் நேற்று நடந்தது. காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தலைமை தாங்கினார்.
முகாமை முன்னிட்டு, இம்மாதம் 7ம் தேதி முதல், 11ம் தேதி வரை பொதுமக்களிடம் இருந்து, 141 மனு பெறப்பட்டன. அதில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு காதொலிக் கருவி, வருவாய் துறை சார்பில் 43 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா, முதல்வரின் உழவர் பாதுகாப்பு திட்டம் சார்பில் 4 பயனாளிகளுககு இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகை, 7 பயனாளிகளுக்கு திருமண உதவித்தொகை, 8 பயனாளிகளுக்கு கல்வி உதவித்தொகைகளை காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி வழங்கினார்.
மேலும், ஒருவருக்கு தற்காலிக கொடிய நோய்களுக்கான உதவித்தொகை, 23 பயனாளிக்கு ஸ்மார்ட் கார்டு. ஊரக வளர்ச்சி துறை சார்பில், 11 பயனாளிகளுக்கு மகளிர் சுய உதவிக்குழு வங்கிக் கடன், வேளாண் உழவர் நலத்துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு இடு பொருட்கள், தோட்டகலைத் துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு இடு பொருட்கள், கூட்டுறவு துறை சார்பில், ஒருவருக்கு கால்நடை பராமரிப்புக் கடன், இருவருக்கு மகளிர் சுயஉதவிக் குழு கடன் என, மொத்தம் 106 பயனாளிகளுக்கு 1 கோடியே 6 லட்சத்து 98 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் கலெக்டர் கலைச்செல்வி வழக்கினார்.
முகாமை தொடர்ந்து, சேந்தமங்கலம் ஊராட்சியில் உள்ள, அங்கன்வாடி மையம், நியாய விலைக் கடை, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளிட்டவகைளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மாணவ- - மாணவியரில் கற்றல் திறனை கேட்டறிந்து, மதிய உணவு கூடத்தினை பார்வையிட்டு, உணவின் தரத்தினை ஆய்வு மேற்கொண்டார்.
இதில், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், ஸ்ரீபெரும்புதுார் வருவாய் கோட்டாட்சியர் சரவணக்கண்ணன், ஒன்றியக் குழுத் தலைவர் கருணாநிதி, ஊராட்சி தலைவர் சார்லஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.