/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சிறு பாலங்களுக்கு ரூ.12 லட்சம் ஒதுக்கீடு
/
சிறு பாலங்களுக்கு ரூ.12 லட்சம் ஒதுக்கீடு
ADDED : ஆக 13, 2025 10:50 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில் இரண்டு சிறு பாலங்களுக்கு, 12 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, கட்டுமான பணிகளுக்கு பூமி பூஜை போடப்பட்டது.
காஞ்சிபுரம் நகரில், அஷ்டபுஜ பெருமாள் கோவில் செல்லும் வழியில் மஞ்சள் நீர் கால்வாயின் கிளை கால்வாய் செல்கிறது. இந்த கால்வாயின் குறுக்கே அடுத்தடுத்து இரண்டு சிறு பாலங்கள் உள்ளன.
இந்த பாலங்கள், சேதமடைந்து ஒராண்டாக மோசமான நிலையில் இருந்தன. வாகன ஓட்டிகள் அச்சத்துடன் இந்த பாலத்தை கடந்து சென்றனர். புதிய சிறு பாலங்கள் கட்டி தர வேண்டும் எனவும், அப்பகுதியினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், இரு சிறு பாலங்களுக்கும் தலா, 6 லட்சம் ரூபாய் மாநகராட்சி நிர்வாகம் ஒதுக்கீடு செய்துள்ளது.
மாநகராட்சியின் மூன்றாவது மண்டல குழு தலைவர் சாந்தி முன்னிலையில், சிறு பாலங்களுக்கான பூமி பூஜை நேற்று போடப்பட்டது. இரண்டு மாதங்களில் பால பணிகள் முடியும் என, மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்தது.