/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நுாலகத்திற்கு ரூ.20 லட்சம் செலவா? முத்தியால்பேட்டை கிராமத்தினர் 'ஷாக்'

ADDED : ஜன 05, 2025 01:11 AM

காஞ்சிபுரம்:வாலாஜாபாத் ஒன்றியம் முத்தியால்பேட்டை ஊராட்சியில், புதிய நுாலக கட்டடம் கட்ட காஞ்சிபுரம் தி.மு.க.,- - எம்.பி., செல்வம், தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 20 லட்சம் ரூபாய் மதிப்பில், நுாலக கட்டடம் கட்டப்பட்டுள்ளது. கட்டுமான பணி முடிந்து இரு மாதங்களுக்கு மேலாகியும், நுாலக கட்டடம் பயன்பாட்டிற்கு வராமல் வீணாகி வருகிறது.
இது ஒருபுறம் இருக்க, இந்த சிறிய கட்டடம் கட்டுவதற்கு, 20 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டது, கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஊரக வளர்ச்சித் துறை சார்பில், இந்த கட்டடத்திற்கு திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது.
அதன்பின், பணி ஆணை வழங்கப்பட்டு, ஒப்பந்ததாரர் வாயிலாக கட்டுமான பணிகள் நடந்துள்ளன. ஊரக வளர்ச்சித் துறை சார்பில், இந்த கட்டடத்திற்கு அதிக தொகையை திட்ட மதிப்பாக தயார் செய்திருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
ஒரு சதுரடிக்கு, 2,500 ரூபாய் வீதம் செலவிட்டாலும், 20 லட்சம் ரூபாய் செலவாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேபோல், ராஜாஜி மார்க்கெட் கட்டுமான பணிக்கு, 7 கோடி ரூபாய் செலவானதாக தெரிவிக்கப்பட்டது விமர்சனங்களை எழுப்பியுள்ளது.