/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஸ்ரீபெரும்புதுார் ராமானுஜர் கோவிலில் உண்டியல் காணிக்கை ரூ.22 லட்சம்

ADDED : ஏப் 23, 2025 12:53 AM

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுாரில், ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், ராமானுஜர் தானுகந்த திருமேனியாக பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
திருவாதிரை நட்சத்திரத்தில் ராமானுஜர் அவதரித்ததால், பிரதிமாதம் திருவாதிரை திருமஞ்சனம் வெகு விமரிசையாக நடைபெறும். இக்கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி, பல்வேறு மாநிலத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து, ஆதிகேசவப் பெருமாள் மற்றும் ராமானுஜரை வழிபட்டு செல்கின்றனர்.
அவ்வாறு வரும் பக்தர்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கை மற்றும் தங்க, வெள்ளி பொருட்கள் உள்ளிட்டவை, ஹிந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் கார்த்திகேயன் தலைமையில் நேற்று திறந்து எண்ணப்பட்டது.
அதில், 22 லட்சத்து 61,750 ரூபாய் பணம், 31 கிராம் தங்கம், 175 கிராம் வெள்ளி காணிக்கையாக கிடைத்தது.
கோவில் செயல் அலுவலர் கதிரவன், அறங்காவலர் குழு தலைவர்கள் கோபால், பார்த்தசாரதி மற்றும் கோவில் அலுவலர்கள் உடன் இருந்தனர்.