/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
டாஸ்மாக் சுவரில் துளையிட்டு ரூ.30,000 கொள்ளை
/
டாஸ்மாக் சுவரில் துளையிட்டு ரூ.30,000 கொள்ளை
ADDED : மார் 18, 2025 12:19 AM

காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் அருகே, செவிலிமேடு பகுதியில், பாலாற்றையொட்டி டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இக்கடையில் சனிக்கிழமை இரவு மது விற்பனையை முடித்த பின், கடையை பூட்டிக் கொண்டு ஊழியர்கள் சென்றனர்.
நேற்று முன்தினம், வழக்கம்போல, கடையை திறக்க ஊழியர்கள் கடையை திறந்து பார்த்தபோது, கடையின் பின்பக்க சுவரில் மர்ம நபர்கள் ஓட்டை போட்டிருப்பது தெரியவந்துள்ளது.
மதுபான பெட்டிகள் களைந்து கிடப்பது தெரியவந்தது. இந்த சம்பவத்தில், 30,000 ரூபாய் ரொக்கமும், ஏராளமான மதுபான பாட்டில்கள் கொள்ளை போனதாக கூறப்படுகிறது.
ஆனால், போலீஸ் தரப்பில், எந்த பொருட்களும் கொள்ளை அடிக்கப்படவில்லை என தெரிவிக்கின்றனர். டாஸ்மாக் கடைக்கு பின்புறம், வயல்வெளியும், பாலாறும் இருப்பதால், ஆள் நடமாட்டம் இன்றி உள்ளது. இதை சாதகமாக பயன்படுத்திய கொள்ளையர்கள், சுவரில் துளையிட்டு கொள்ளையடித்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.