/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
67 சிறுபாசன ஏரிகளை தூர்வார ரூ.4.29 கோடி நிதி ஒதுக்கீடு
/
67 சிறுபாசன ஏரிகளை தூர்வார ரூ.4.29 கோடி நிதி ஒதுக்கீடு
67 சிறுபாசன ஏரிகளை தூர்வார ரூ.4.29 கோடி நிதி ஒதுக்கீடு
67 சிறுபாசன ஏரிகளை தூர்வார ரூ.4.29 கோடி நிதி ஒதுக்கீடு
ADDED : ஏப் 10, 2025 07:50 PM
உத்திரமேரூர்:காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர், வாலாஜாபாத், குன்றத்தூர் ஆகிய ஐந்து ஒன்றியங்களில், ஊரக வளர்ச்சி துறையின் கட்டுப்பாட்டின் கீழ், 380 சிறுபாசன ஏரிகள் உள்ளன.
இந்த ஏரி நீரை பயன்படுத்தி 60,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. ஊரக வளர்ச்சி துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சிறுபாசன ஏரிகளின் கொள்ளளவை மீட்டெடுக்கவும், நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரிக்கவும், குடிநீர் தேவையை பூர்த்தி செய்யவும், அவ்வப்போது ஏரிகள் தூர்வாரப்படுவது வழக்கம்.
இந்நிலையில், 2024 --- 25 நிதி ஆண்டின் பட்ஜெட் உரையில் 5,000 சிறுபாசன ஏரிகள், 500 கோடி ரூபாய் மதிப்பில் தூர்வாரப்படும் என, தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 380 ஏரிகளில், 24 ஏரிகள் என்.ஜி.ஒ., / சி.எஸ்.ஆர்., அமைப்புகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.
தொடர்ந்து, 289 ஏரிகளுக்கு கனிம வள நிதியின் கீழ் பணிகளை மேற்கொள்ள அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தற்போது, மீதமுள்ள 67 ஏரிகளுக்கு ஊராட்சி ஒன்றியங்களில் சிறுபாசன ஏரிகள் புத்துயிர் அளித்தல் திட்டத்தின்கீழ், 4.29 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதில், காஞ்சிபுரம் ஒன்றியத்தில் உள்ள மூன்று சிறுபாசன ஏரிகளுக்கு, 24 லட்சத்து. 66,000 ரூபாயும், உத்திரமேரூர் ஒன்றியத்தில் உள்ள, 52 சிறுபாசன ஏரிகளுக்கு, 3 கோடியே 30. லட்சத்து, 23,000 ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல, வாலாஜாபாத் ஒன்றியத்தில் உள்ள 12 சிறுபாசன ஏரிகளுக்கு, 75 லட்சத்து, 4,000 ரூபாயும், என, மொத்தம், 4 கோடியே 29 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து ஊரக வளர்ச்சித் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 67 சிறுபாசன ஏரிகளை துார்வார 4 கோடியே 29 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதில், ஏரியில் உள்ள வரத்து கால்வாய், உபரி நீர் வெளியேறும் போக்கு கால்வாய் ஆகியவற்றை தூர்வாரி, ஏரியை ஆழப்படுத்தும் பணிகளும் நடக்க உள்ளது.
இந்த பணிகள் விரைவில் துவங்கப்பட்டு, 2025ம் ஆண்டுக்குள் முடிக்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

